வருணா தொகுதியில் என்னை வீழ்த்த நினைக்கும் பா.ஜனதாவினர் தந்திரம் பலிக்காது: சித்தராமையா !!
சாம்ராஜ்நகரில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்ய பிரதாப் சிம்ஹா எம்.பி. வருகிறார்?. அவர் மைசூரு-குடகு தொகுதியில் பிரசாரம் செய்யாமல் தோல்வி பயத்தில் இங்கே வந்து சுற்றித்திரிகிறார். வருணா தொகுதியில் என்னை தோற்கடிக்க பா.ஜனதா- ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து சதி செய்து வருகிறது. ஆனால் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. வருணா தொகுதி வாக்காளர்களை நம்பி களமிறங்கி உள்ளேன்.
வருணா மக்கள் என் மீது முன்பைவிட தற்போது அதீத அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் தேர்தலில் நான் தோல்வி அடைய மாட்டேன். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை வீழ்த்த பா.ஜனதா கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது. பி.எல்.சந்தோசுக்கும், வருணா தொகுதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் இங்கு வந்து பிரசாரம் செய்கிறார். என்னை வீழ்த்த நினைக்கும் அவர்களது தந்திரம் எதுவும் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.