சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கர்களை மீட்டு வருவதற்காக இரு சி-130ஜே வகை விமானங்கள் தயாராக உள்ளன: வெளியுறவு அமைச்சகம் தகவல்!!
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கர்களை மீட்டு வருவதற்காக இரு சி-130ஜே வகை விமானங்கள் தயாராக உள்ளன என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சூடான் வான் பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியர்களை மீட்பதற்கான இரு விமானங்களும் சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் தயாராக உள்ளதாகவும் இந்தியர்களை சூடானிலிருந்து மீட்டுவர பல தரப்பினருடனும் பேசி ஒருங்கிணைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.