;
Athirady Tamil News

ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விருப்பமில்லாததால் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறிய இரட்டை சகோதரிகள்: இங்கிலாந்தில் விநோதம்!!

0

இங்கிலாந்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விருப்பமில்லாத இரட்டை சகோதரிகள், தற்போது ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறியுள்ளனர். பெரும்பாலும் இரட்டை சகோதரர்கள் அல்லது சகோதரிகளாக இருப்பவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், உணவு பழக்க வழக்கங்கள், நோய் பாதிப்பு போன்றவை ஒரே மாதிரியாகவே இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் அதிக நாட்கள் விலகி இருக்க மாட்டார்கள். அந்த வகையில் இங்கிலாந்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் லிண்ட்சே, லூயிஸ் ஸ்காட் ஆகியோர் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றனர். படுக்கைகள் முதல் உடைகள் வரை அனைத்தையும் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். இங்கிலாந்தின் ‘டெய்லி ஸ்டார்’ வெளியிட்ட செய்தியில், இந்த இரட்டை சகோதரிகளுக்கு 23 வயது ஆகிறது. சிறுவயதில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள், தற்போது ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ முடியாத நிலைக்கு தங்களது உறவை வளர்த்துக் கொண்டனர்.

இருவருக்கும் வயது 18 ஆக இருந்தபோது, லூயிஸ் ஸ்காட் மேல் படிப்புக்காக லிவர்பூல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அப்போது லிண்ட்சே வீட்டிலேயே இருந்தார். அதன்பின் இருவரும் சேர்ந்தே வாழ்கின்றனர். இருவரும் ஒரே மாதிரியான ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். ஒரே மாதிரியான உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சகோதரிகள் இருவரும் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறிவிட்டனர். ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும், மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், 24 மணி நேரம் கூட தங்களால் பிரிந்து இருக்க முடியாது என்றும் கூறுகின்றனர். விநோதமான இந்த இரட்டை சகோதரிகள் குறித்த செய்தி ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.