;
Athirady Tamil News

ஆளும்கட்சி எம்.பிகளின் கூட்டம் இன்று !!

0

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான பாராளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக அறியமுடிகிறது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிககப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் திங்கட்கிழமை (24) மாலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.