மே, ஜூன் மாதங்களில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு!!
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம்.
போலி இணையதளங்களை நம்ப வேண்டாம். பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான URL https://tirupatibalaji.ap.gov.in என்ற முகவரியை பயன்படுத்தலாம். பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான “TTDevasthanams” மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.