;
Athirady Tamil News

புதிதாக 7,533 பேருக்கு தொற்று: கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக குறைந்தது !!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 7,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிப்பு நேற்று முன்தினம் 9,629 ஆக இருந்தது. நேற்று 9,355 ஆக குறைந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,277, டெல்லியில் 865, மராட்டியத்தில் 754, அரியானாவில் 693, ஒடிசாவில் 516, உத்தர பிரதேசத்தில் 507 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 32 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 11,047 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரத்து 24 பேர் மரணமடைந்துள்ளனர்.

தற்போது 53,852 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,558 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் டெல்லியில் 7பேர், மராட்டியம், சத்தீஸ்கரில் தலா 3 பேர் உள்பட 28 பேர் நேற்று இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 16 மரணங்கள் சுகாதாரத்துறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.