வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தன்று மோட்டார் வாகன ஊர்வலம்!!
வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே தினத்தன்று மோட்டார் வாகன ஊர்வலமொன்று நடைபெறவுள்ளது.
மே முதலாம் திகதி காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவுபெறவுள்ளது.
உலகம் முழுவதும் மே தினம் உழைப்பாளர்கள் உரிமைக்காக கொண்டாடப்படுகின்ற நிலையில் அன்றைய தினம் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஊர்வலத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.