இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா..!
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் இராணுவ பலத்தை அதிகரிக்க சீனா திட்டமிட்டு முயற்சித்து வருகிறது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு பெரும் அளவில் கடன் கொடுத்து வரும் சீனா,இலங்கையின் உள்ள ஹம்பாந்தோட்டை மற்றும் பாகிஸ்தானின் கவாடர் துறைமுகளை தங்கள் வசம் வைத்துள்ளது.
இப்போது, ஈரானின் சா பாஹர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் கலீபா துறைமுகங்களில் இராணுவ தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சீனாவின் யுவாங் வாங் 5 என்ற உளவு கப்பல், தென் ஆப்ரிக்காவின் தர்பன் துறைமுகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு, இந்தியப் பெருங்கடல் மற்றும் பிசிபிக் கடல் பகுதியின் கப்பல் போக்குவரத்தை உளவு பார்த்து வருகிறது.
மேலும், தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் ரியாம் நகரில் புதிய துறைமுகம் அமைக்கும் பேச்சிலும் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவின் மேற்கு கடல் பகுதி மற்றும் தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவிலும் தங்கள் கடற்படையை வலுப்படுத்தும் முயற்சியில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஈடுபட்டுள்ளார்.