காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!!
உலக தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியான இன்று (01) திங்கட்கிழமை காத்தான்குடியில் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
காத்தான்குடி வர்த்தக சங்கம் காத்தான்குடி வர்த்தகர்களுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து காத்தான்குடி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் இம் முறை மே தின ஊர்வலங்கள் எதுவும் இடம் பெறவில்லை.