பாரிய எரிபொருள் நெருக்கடியால் தடைப்பட்ட பாரம்பரிய மே தின அணி வகுப்பு!
கியூபாவில் நிலவும் நாட்டின் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாரம்பரிய மே தின அணி வகுப்பு இரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் கியூபாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதுடன், சாரதிகள் பல நாள் காத்திருப்பில் உள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், அதிபர் மிகுவல் டயஸ்-கனெல், கியூபாவிற்கு தேவையான எரிபொருளில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே கிடைக்கிறது என்று கூறினார்.
விநியோகஸ்தர்கள் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், கியூபாவில் வருடந்தோறும் மிக சிறப்பாக மேற்கொள்ளப்படும் பாரம்பரிய மே தின அணி வகுப்பு எரிபொருள் நெருக்கடி காரணமாக நேற்று இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், 1959 புரட்சிக்குப் பிறகு பொருளாதார காரணங்களுக்காக மே தின அணி வகுப்பு இரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகின்றது.