விலைமாதுக்கள் கைகலப்பு – பொலிஸார் விசாரணை!
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் விலைமாதுக்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் நடமாடித் திரிகின்ற இரு விலைமாதுக்கள் விடுமுறையில் செல்லும் ஒருவரை யார் அழைப்பது என தமக்கு முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் விலைமாது ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபடுவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்களும், சமூக அமைப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.