;
Athirady Tamil News

மனைவி கொலை; கணவன் கைது!!

0

மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சந்தேகத்தில் பெண்ணின் கணவனை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட தனது மகளை அழைத்து வருவதற்காக செல்லும் வழியில் இரவு 7 மணியளவில் தனது மனைவியை சந்தேக நபர் தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த தனுஜா நிலாந்தி என்ற 44 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரும் தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.