பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லையாம்!!
பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இவ்வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்களும் நாடு திரும்பவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னரே இவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகள் காரணமாக வைத்தியசாலைகளின் மருத்துவப் பிரிவுகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.