;
Athirady Tamil News

தி கேரளா ஸ்டோரிஸ் சினிமாவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!!

0

டைரக்டர் சுதிப்சோ சென் இயக்கத்தில் தி கேரளா ஸ்டோரிஸ் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த இந்து, கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் மலையாளம், தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதனை பார்த்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் கூறும்போது, இது கேரளாவின் கதை இல்லை, உங்களின் கதை என்று தெரிவித்தார்.

முதல்-மந்திரி பினராய் விஜயனும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த படத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றார். அப்போது எதிர்தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த படத்தின் டீசர் வெளியானதும் அதனை ஒரு கோடியே 60 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்தபடத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கி உள்ளது. எனவே படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தி கேரளா ஸ்டோரிஸ் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டுமானால் மனுதாரர் முதலில் ஐகோர்ட்டை அணுக வேண்டும். மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கி உள்ளது. எனவே நீங்கள் தணிக்கை குழுவிடம் இதுகுறித்து முறையிட வேண்டும் என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.