தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு!!
நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். 1958-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சரத்பவார் அரசியலில் அத்தனை உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் அறிவித்துள்ளார். சரத் பவாரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து, அவரே தலைவராகத் தொடர வேண்டும் என தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.