தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகிறார்!!
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 8-ந்தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். தெலுங்கானாவில் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் குறித்து பேசுகிறார். வேலையின்மைக்கு எதிராக நடைபயணமாக மைதானத்திற்கு வரும் பிரியங்கா காந்தி முன்னதாக எல்.பி. நகரில் உள்ள ஸ்ரீ காந்தா சாரி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
பிரியங்கா காந்தி முன்னிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சிறிய அரசியல் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்திற்கு பலத்த போலீஸ் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. பிரியங்கா காந்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவது எதிரணியினருக்கு அதிர்ச்சி தரும் மாநில கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.