அரச வங்கிகளில் ATM அட்டை தட்டுப்பாடு !!
கடந்த பல நாட்களாக அரச வங்கிகளில் புதிய ஏரிஎம் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, புதிய ஏரிஎம் அட்டைகளை தம்மால் பெறமுடியவில்லை என்று அரச வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏரிஎம் அட்டைகள் இல்லாத காரணத்தினால் பாரம்பரிய முறைப்படி வங்கிக்குச் சென்று வரிசையில் நின்று நேரடியாகவே பணத்தை மீளப் பெறவேண்டியுள்ளதாக வாடிக்கையாளர்கள் குறிப்படுகின்றனர்.
இதனால் நேர விரயமும் அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அரச வங்கிகளில் புதிய ஏரிஎம் அட்டைகளோ அல்லது காலாவதியான அட்டைகளுக்குப் பதிலான அட்டைகளோ இப்பொழுது பெற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.