புடினை கொல்ல முயற்சி – உக்ரைன் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு !!
ரஷ்ய அதிபர் புடினை கொல்ல ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறிய குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முற்றாக மறுத்துள்ளார்.
“நாங்கள் புடின் அல்லது மொஸ்கோவைத் தாக்கவில்லை. நாங்கள் எங்கள் பிரதேசத்தில் போராடுகிறோம். நாங்கள் எங்கள் கிராமங்களையும் நகரங்களையும் பாதுகாக்கிறோம்,” என்று அவர் பின்லாந்துக்கு விஜயம் செய்தநிலையில் தெரிவித்துள்ளார்.
கிரெம்ளினில் உள்ள புடினின் இல்லத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும், இது “திட்டமிட்ட பயங்கரவாத செயல் மற்றும் அதிபரை படுகொலை செய்யும் முயற்சி” என்றும் ரஷ்ய அதிபர் அலுவலகம் கூறியது.
உக்ரைனிய அதிபரின் ஆலோசகர் Mykhailo Podolyak பிபிசியிடம் தெரிவிக்கையில், இந்த சம்பவம் ரஷ்யா உக்ரைனில் “பெரிய அளவிலான பயங்கரவாத ஆத்திரமூட்டலுக்குத் தயாராகும்” என்று தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவை தாக்குவதால்
மொஸ்கோவை தாக்குவதால் உக்ரைனுக்கு எந்த அர்த்தமும் இல்லை, ஆனால் பொதுமக்கள் இலக்குகள் மீதான தனது சொந்த தாக்குதல்களை நியாயப்படுத்த ரஷ்யாவிற்கு இது உதவும் என்றார்.