புறக்கோட்டையில் போலி அழகுசாதனப் பொருட்கள் ஒரு தொகை மீட்பு!!
இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளர் பெயர் குறிப்பிடப்படாத அழகுசாதனப் பொருட்கள் உட்பட பெருமளவிலான பொருட்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
புறக்கோட்டை கதிரேசன் வீதியில் உள்ள கிடங்கில் இருந்து அவை மீட்கப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபா என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் வெளிநாட்டுப் பொருட்கள் எனக் கூறி நுகர்வோரை ஏமாற்றி சந்தையில் வெளியிடுவதற்கு தயார்படுத்தப்பட்டதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த அழகுசாதனப் பொருட்களின் மாதிரிகள் ஆய்வக அறிக்கைகளுக்கு அனுப்பப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.