;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று உயர்வு புதிதாக 3,962 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் புதிதாக 3,962 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாதிப்பு 3,325 ஆக இருந்தது. நேற்று 3,720 ஆக உயர்ந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 843 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 7,873 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 828 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 3,933 குறைந்துள்ளது. அதாவது தற்போதைய நிலவரப்படி 36,244 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் 3 பேர், சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப்பில் தலா 2 பேர் உள்பட 15 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 7 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.