எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 17 பேர் பலி- 29 பேர் படுகாயம்!!
தென்மேற்கு எகிப்தில் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் 45 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் கெய்ரோவுக்கு பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மெதுவாக ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்த லாரி மீது இந்த பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் இருபத்தி ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை மீட்பதற்காக விபத்து நடந்த இடத்திற்கு சுமாா் 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை. இங்கு விபத்துகள் பெரும்பாலும் வேகம், மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.