இறந்தவரின் உடலை ஃபிரீசரில் மறைத்த பிரித்தானியர் – வெளியான அதிர்ச்சி காரணம்!
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த ஒருவரின் உடலை 2 ஆண்டுகள் மறைத்து வைத்துள்ளார்.
உடல் உறைய வைக்கும் கருவியில் (ஃபிரீசர்) சடலத்தை மறைத்து வைத்தமையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர் காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் வெளிவந்த உண்மைகள் பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் ஃபிரீசரில் (உடல் உறைய வைக்கும் கருவி) மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால், அவரின் உடல் ஒகஸ்ட் 22, 2020 அன்றே கிடைத்துள்ளது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஜான் வெயின்ரைட் உடலை மறைத்து வைத்திருந்ததை 52 வயதான டேமியன் ஜான்சன் என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
டேமியன் ஜான்சன் குறித்த முதியவரின் உடலை மறைத்து வைத்துக் கொண்டதோடு, உயிரிழந்த அவரின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, அவருக்கு வரும் ஓய்வூதியத் தொகையை கொண்டு தேவையான பொருட்கள் வாங்குவது, பணத்தை எடுத்து செலவிடுவது என வசித்து வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் ஜான் வெயின்ரைட்டினுடைய வங்கி கணக்கில் இருந்து தனது சொந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவது போன்ற செயல்பாடுகளை 2018 முதல் 2020 வரை செய்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டேமியன் ஜாமின் பெற்று வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகின்றார்.