மத்தியப்பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு- ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான சோகம்…!!
மத்தியப்பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் நிலப்பிரச்சனை தொடர்பாக தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் குடும்பத்தினருக்கு இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக்கொண்டனர். மோதலில் கஜேந்திர சிங் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் மற்றொரு தரப்பு சுட்டுக்கொன்றது. துப்பாக்கிச்சூட்டில் லேசான காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலத்தகராறு மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.