சூடான் வன்முறைக்கு மத்தியில் 10 லட்சத்திற்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் சேதம்- ஐ.நா!!
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் போருக்கு மத்தியில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ராணுவ படையினர் ஈடுபட்டனர். தர்பார் பகுதியில் கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரியும் போராட்டக்காரர்கள் கடைகள், மால்கள், மற்றும் வீடுகளை உடைத்து அங்கிருக்கும் பொருட்கள் மற்றும் நகை, பணத்தை சூறையாடி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதன் விளைவாக குழந்தைகளுக்கான 10 லட்சத்திற்கும் மேற்பட்ட போலியோ தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளன. குறிப்பாக, சவுத் டார்பூர் பகுதியில் 10 லட்சத்திற்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் உட்பட பல குளிர் சாதன வசதிகள் சூறையாடப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு மற்றும் அழிக்கப்பட்டுள்ளன என்று யுனிசெப்பின் அவசரகால திட்டங்களின் துணை இயக்குனர் ஹேசல் டி வெட் தெரிவித்தார்.