அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சகோதரர்கள் சுட்டுக்கொலை: பஞ்சாப் இளைஞர் கைது!!
அமெரிக்காவில் பணம் கொடுக்கல், வாங்கலில் இந்திய வம்சாவளி சகோதரர்களை சுட்டுக் கொலை செய்த பஞ்சாப் இளைஞரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவை சேர்ந்த தில்ராஜ் சிங் தீபி (31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்று அங்கு ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவர் அங்குள்ள ஜெனரல் ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது தம்பி கோரா (26) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் கபூர்தலாவில் இருந்து அமெரிக்கா சென்றார். அங்கு அவரது அண்ணன் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், சகோதரர்கள் இருவரையும் பஞ்சாபை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை சுட்டுக் கொன்றுள்ளார். இதில் ஜேபான் பிரித் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.