;
Athirady Tamil News

புங்குடுதீவுக்குப் பெருமை: ”உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா” நடாத்திய, “கௌரவ முனைவர் பட்டம்” வழங்கும் நிகழ்வு.. (படங்கள் வீடியோ)

0

”உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா, நடாத்திய கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு” (படங்கள் வீடியோ)

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் 30/04/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா [International Tamil University (USA)], தமிழ் மொழி மற்றும் இனம் சார்பாக பிரித்தானியாவிலும் கனடாவிலும், பல சமூக சேவைகளைத் தொடர்ந்து ஆற்றி வரும் பல நபர்களைத் நேர்த்தியாகத் தெரிவுசெய்து கௌரவ முனைவர் பட்டம் (Honorary Doctorate Degree) வழங்கும் நிகழ்வு பிரித்தானியாவின் கரோ என்னும் பகுதியில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் (University of Westminster, Harrow Campus) நடைபெற்றது.

இந்நிகழ்வில் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், லண்டனில் வாழ்ந்தவர்களுமான “சொக்கர், நாகேஷ்” என அன்புடன் அழைக்கப்பட்ட அமரர்களான சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட புதல்வர்களான புங்குடுதீவு மண்ணின் மைந்தர்களும், லண்டனில் வசிப்பவர்களுமான “கண்ணன் அன்றில் கரு” என அன்புடன் அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம், மற்றும் “பாபு அன்றில் யோகி” என அன்புடன் அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோருக்கும் கௌரவ “முனைவர் படம்” (டாக்டர்) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவர் முனைவர் சாந்தி ஓம்மகண்டத்தின் தலைமையில் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரஷ்மி ரூமி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடந்தேறியது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு தொழிலதிபர் முனைவர் பாலச்சந்திரன் நாகலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார். இந்த நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வை, திரு. சதீஸ் மற்றும் திருமதி சதீஸ் ஆகியோர் மிக நேர்த்தியாக அறிவிப்பை மேற்கொண்டு சிறப்பாக இயக்கினர்.

மங்கல விளக்கை உள்ளூர் மாகாண சபை உறுப்பினர் மதிப்புக்குரிய திரு.சீலன் ராஜன், திருமதி சாரதா கணேசராஜா, செல்வி ராஜலட்சுமி நாகலிங்கம் மற்றும் திருமதி கிரிஜா ஜெனோ அவர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அக வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வாணி சுதனின் மாணவிகள் செல்வி ஆரணி சுகுமார், செல்வி நவியா ராஜகுமார், செல்வி அக்சிதா பாலேந்திரா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவர் முனைவர் சாந்தி ஓம்மகண்டத்தின் உரையும், சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரஷ்மி ரூமியின் உரையும், முனைவர் பாலச்சந்திரன் நாகலிங்கத்தின் சிறப்புரையும், ஈலிங் அம்மன் கோயிலின் பிரதான குருக்களின் வாழ்த்துரையும் இனிதே வழங்கப்பட்டு நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கௌரவ முனைவர் பட்டமளிப்பு நிகழ்வு கீழ்கண்டவர்களுக்கு வழங்கப்பட்டது..

🔷 இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினரும் மரியாதைக்குரிய அமைச்சர் போல் ஸ்கேலி (Minister Hon. Paul Scully MP, Conservative Party & Former Chair person of All-Party Parliamentary Group for Tamils) இவர்களுக்கும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது என்பது சிறப்பானது.

🔷 இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய சார் எட்வர்ட் டேவி (Rt. Hon. Sir Edward Davey MP, Leader of Liberal Democrats Party) அவர்களுக்கும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

🔷 இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய வீரேந்திர ஷர்மா (Hon. Virendra Sharma MP, Labour Party) அவர்களுக்கும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

🔷 அதனை தொடர்ந்து பிரித்தானியாவில் உள்ள சாம் கவுன்சிலர் மரியாதைக்குரிய பரமலிங்கம் விவேகானந்தா (Local Conservative Councillor for North Cheam Mr.Paramalingham Vivehanandha (Param Nanda)) அவர்களுக்கு அவர் கவுன்சிலரக நமது தமிழ் மக்களுக்கு அதிக அளவில் உதவி செய்து வருகிறார் ஆகையால் அவர்களுக்கும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

🔷 லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய கௌரவ செயலாளருமான திரு. சொக்கலிங்கம் கருணைலிங்கம் (Mr. Sockalingam Karunalingam, Secretary for Ealing Kanakai Amman Temple & Social Worker) அவர்களுக்கு, அவர் இம்மண்ணிலிருந்து சமய, சமூக மற்றும் பண்பாட்டு சேவைகளை தாயகத்திலும் புலத்திலும் ஆற்றும் அளப்பரிய பணியைக் கௌரவித்து கௌரவ முனைவர் பட்டம் அளித்து கௌரவிக்கப்பட்டார்.

🔷 லண்டன் மனித உரிமை வழக்கறிஞர் திரு. அருண் கானநாதன் (Mr. Arun Gananathan, Human Rights Lawyer & Tamil Human Rights Activist) அவர்களுக்கும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

🔷 லண்டன் மூத்த சட்ட ஆலோசகர் திரு. குலசேகரம் கீர்த்தனன் (Mr. Kulasegaram Geetharthanan, Senior Legal Advisor & Tamil Human Rights Activist) இவர்களுக்கும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

🔷 மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. அருணாச்சலம் ராஜலிங்கம் (Mr. Arunasalam Rajalingam, Tamil Human Rights Activist) அவர்களுக்கும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

🔷 லண்டன் பெண் தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் திருமதி யசோதா மனோகர்தாஸ் (Mrs. Jasotha Manoharan, Social Worker) இவர்களுக்கும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

🔷 கனடா நாட்டு தமிழ் மனித உரிமை சிந்தனையாளர் சமூக சேவகர் திரு. ஜோசப் அந்தோணி (Mr. Joshph P Antony, TamilHuman Rights Activist & Social Worker) அவர்களுக்கும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

🔷 பல வருடங்களாக ஈழத்தமிழ் மக்களுக்காக, பிரித்தானியாவிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் எண்ணற்ற பல உதவிகள் செய்து வரும் திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் (Mr.Sockalingam Yogalingam, Deputy Minister for Prime Minister Office of Transnational Government of Tamil Eelam “TGTE”, Assistant Director of “Act Now”, Councillor of “Nations without States” & Tamil Human Rights Activist), அதுமட்டுமல்லாமல் இவர் பல பதவிகளையும் வகித்து வருகிறார். பிரித்தானியாவில் தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் இவரை நேசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது என்பதை பெருமையாக கருதுகின்றோம்.

இதனைத் தொடர்ந்து நன்றி உரையை திரு கொலின் ஜோசப் (Mr Colin Joseph) அவர்கள் வழங்கினார். அதன் பின் குழுப்புகைப்படப் பதிவுடன் இன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

Video of the event;

Photos of “Honorary Doctorates Award Ceremony” – 1 of 3
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid024StTzkfs2BRd9gUTS1tRkA6rviAFvLe9vSe674WpoQ8vuiMoCLNckMg8AV8n6vMcl&id=100002424123780&sfnsn=scwspwa

Photos of “Honorary Doctorates Award Ceremony” – 2 of 3
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02GR2Z6umPjhuuMVRecTckt6w7VgjDxhj35bLfuvtHVPcjpEBERxgEhZhBncyUKCRel&id=100002424123780&sfnsn=scwspwa

Photos of “Honorary Doctorates Award Ceremony” – 3 of 3
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TZ7fF7gFQUeoUfy5po4bxDiMcWrrM6CevwWqByv6zbM8PBpm21zjbxZLusV6Dfwcl&id=100009833256437&sfnsn=scwspwa

Dr. S.M.Rashmi Roomi – International Coordinator’s interview….

You might also like

Leave A Reply

Your email address will not be published.