ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம்!!
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித்த ரங்க பண்டார தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம் ஒன்று இன்று (06) இடம்பெற்றது.
வவுனியா, மில் வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்தும் மாவட்ட மட்ட கட்டமைப்பை பலப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மாவட்ட மட்டத்தில் மறுசீரமைத்து மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.