ரஷ்யா ஏவிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை அழிப்பு!!
கீவ்வை தகர்க்க ரஷ்ய ராணுவம் ஏவிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக வானிலேயே தாக்கி அழித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் விமானப்படை தளபதி மைகோலா ஒலேஸ்சுக் டெலிகிராம் அறிக்கையில், ‘ரஷ்யாவின் கின்சால் வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்காவின் பாட்ரியாட் பாதுகாப்பு அமைப்பு மூலம் வானிலேயே இடைமறித்து தகர்த்துள்ளோம்’ என்றார்.
கேஎச்-47 ஏவுகணை ரஷ்யாவில் இருந்து மிக்-31கே விமானத்தில் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. 2000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும். ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும். இதை இடைமறித்து உக்ரைன் வானிலேயே தாக்கி அழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.