இங்கிலாந்து கவுன்சிலராக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் மகன் தேர்வு!!
இங்கிலாந்தில் கடந்த 4ம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தை சேர்ந்தவரும், எம்.ஜி.ஆர் முதமைச்சராக இருந்தபோது குத்தாலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவரான பாப்பா சுப்ரமணியனின் மூத்த மகன் வெற்றியழகன்.
பொறியியல் பட்டதாரியான இவர் லண்டனில் பணிபுரிந்து, கடந்த 15 ஆண்டுகளாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இங்கிலாந்து குடியுரிமை பெற்ற வெற்றியழகன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் கவுன்சிலராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், மகனின் வெற்றி குறித்து தந்தை பாப்பா சுப்பிரமணியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.