வாணியம்பாடி அருகே அபாய சங்கிலி இழுத்ததால் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு வந்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே செல்லும் போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 8 பெட்டியில் இருந்த ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் நடுவழியில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்ததும் டிக்கெட் பரிசோதகர் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் அபாய சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்தவர்கள் அபாய சங்கிலி பிடித்த இழுத்தது யார் என தெரியாது என கூறினர். மேலும் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் உரிய பதில் கூறவில்லை. நடுவழியில் நின்ற சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 15 நிமிடம் கால தாமதமாக மீண்டும் புப்பட்டு சென்றது. இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.