CAA விசாரணை பிரிவு அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு !!
நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை பிரிவு அதிகாரிகள் தமது கடமைகளிலிருந்து விலகி அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என அகில இலங்கை விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கோசல ரங்கநாத் தெரிவித்துள்ளார்.
தமது அதிகாரிகள் மீதான தாக்குதலை கண்டித்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாரம்மல பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 03 சந்தேகநபர்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த விசாரணைப்பிரிவு அதிகாரிகள் 05 பேர் குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.