பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தல்கள் வரவில்லை – வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா!!
தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், குறித்த விடயத்தின் உண்மைத்தன்மை தொடர்பில், கருத்து தெரிவித்த போதே வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறித்த விடயத்தை தெரிவித்தார்.