கடும் பனி மூட்டம் – சாரதிகளுக்கான எச்சரிக்கை!!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் புகை மூட்டங்கள் சூழ்ந்துள்ளதால் சாரதிகளை மிகவும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் ஹட்டன் முதல் கித்துல்கலை வரையிலான, வட்டவளை, கினிகத்தேனை ஆகிய பகுதிகளிலேயே அடர்த்தியான புகை மூட்டங்கள் சூழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பகல் வேளையிலும் வாகனத்தின் மின் விளக்குகளை ஒளிரச் செய்து பயணிக்குமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.