;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 2,380 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,839 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 28-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 1,573 ஆக இருந்தது. மறுநாள் பாதிப்பு 2,151 ஆக உயர்ந்தது. அதன்பிறகு தற்போது மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 71 ஆயிரத்து 469 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,861 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி 25,178 பேர் தொற்று பாதிப்புக்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,034 குறைவு ஆகும் தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் 3 பேர், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா 2 பேர் உள்பட 11 பேரும், கேரளாவில் விடுபட்ட 1 மரணம் என மேலும் 12 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 692 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.