“பரு” வந்தால் எச்சரிக்கை தேவை! மூக்கில் வந்த குட்டி பரு.. கடைசியில் பார்த்தால் தோல் கேன்சராம்!!
இளம்பெண் ஒருவருக்கு முகத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பரு மிக மோசமான பாதிப்பிற்குக் காரணமாக அமைந்துள்ள ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகத்தில் பிம்பிள் எனப்படும் முகப்பருக்கள் ஏற்படுவது ரொம்பவே வழக்கமான ஒரு நிகழ்வு தான். பல சமயங்களில் அவை ஹார்மோன்களுடன் தொடர்புடையவையாக இருக்கிறது.மாசு மற்றும் அழுக்கு காரணமாகவும் கூட பருக்கள் ஏற்படும்.
பொதுவாக இப்படி ஏற்படும் பருக்கள் சில நாட்களில் அதிகபட்சம் சில வாரங்களில் தானாகச் சரியாகிவிடும். இதனால் பெரும்பாலானோர் பருக்களைப் பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். முகத்தில் ஏற்பட்ட பரு: ஆனால், 52 வயதான மைக்கேல் டேவிஸ் என்பவருக்குப் பரு மிகவும் கொடிய ஒரு புற்றுநோயின் அறிகுறியாக இருந்துள்ளது. அந்த சின்ன பரு அவரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு மூக்கில் சிவப்பு நிறத்தில் ஒரு சின்ன பரு ஏற்பட்டுள்ளது. அது சாதாரண பரு என்றே அவர் முதலில் நினைத்துள்ளார். இருப்பினும், அதைச் சுற்றி அவருக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கே ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது.. என்ன செய்தும் ரத்தப்போக்கு நிற்கவே இல்லை.
இதையடுத்து அவருக்கு பயாப்ஸி செய்யப்பட்டது. அப்போது தான் அவருக்கு பாசல் செல் கார்சினோமா எனப்படும் தோல் கேன்சர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மைக்கேல் டேவிஸுக்கு கேன்சர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூக்கு பகுதியில் இருந்த தோலின் கேன்சர் அகற்றப்பட்டது. வழக்கமான பரு இல்லை: அந்த பெண் முதலில் இதைச் சாதாரண பரு என்றே நினைத்துள்ளார். இதனால் இதை அகற்ற அவர் உண்மையில் பெரிதாக எதையும் செய்யவில்லை. அந்த பருவை வழக்கமான பரு என்றே நினைத்து, அதைக் கசக்கியுள்ளார். இருப்பினும், அதில் இருந்து எதுவும் வரவில்லையாம். இருப்பினும், ஒரே வாரத்தில் அதில் இருந்து ரத்தம் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. மேலும், வழக்கமான பருவைக் காட்டிலும் அது மிகவும் கடினமாக இருந்துள்ளது. இந்தச் சூழலில் தான் கடந்த பிப்ரவரியில், அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ரத்தம் தொடர்ந்து மூக்கில் இருந்த பருவில் இருந்து வந்து கொண்டே இருக்கவே அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது தான் அவருக்கு கேன்சர் இருப்பதும் அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதும் தெரிய வந்தது.
கேன்சர்: ஆப்ரேஷனில் அவரது கேன்சர் வெற்றிகரமாக அகற்றப்பட்டுவிட்டது. இருந்த போதிலும், அதன் பின்னர் அவரது மூக்கு வித்தியாசமான வடிவத்தில் தழும்புகளுடன் மாறிவிட்டதாம். இருப்பினும், சில வாரங்களிலேயே அது குணமடைந்து மீண்டும் நார்மலாகிவிட்டது. இருப்பினும், ஒருமுறை தோல் புற்றுநோய் வந்தால் மீண்டும் மீண்டும் அது வர வாய்ப்புகள் அதிகமாகும். H
இந்த வகை புற்றுநோய் பெசல் செல்களில் தொடங்குகிறது. பழையவை இறக்கும் போது அங்கே புதிய தோல் செல்களை உருவாகும். இங்கே கேன்சர் ஏற்படும்போது தான் இந்த பாதிப்பு ஏற்படும். அதீத சூரிய ஒளியில் நாம் நேரடியாகப் படுவதைக் குறைப்பதன் மூலம் இதை நாம் தடுக்கலாம். அறிகுறிகள்: தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை முக்கியமானவை. ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்தால் எளிதாகச் சிகிச்சை தர முடியும். முகம் மற்றும் கழுத்து போன்ற வெயிலில் வெளிப்படும் பகுதிகளில் செதில் திட்டுகள் போல ஏற்படும்… முதலில் வெள்ளை அல்லது பழுப்பு நிற மெழுகு கட்டிபோன்ற செதில்கள் ஏற்படும். ஒளி ஊடுருவக்கூடிய, பளபளப்பான, தோல் நிறமுள்ள பருக்கள் போல ஏற்படும். வெள்ளை, மெழுகு போன்ற வடு புண்களும் ஏற்படும்.
அலறிய குடும்பம் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும். மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.