இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைப்பு!!
இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கான திகதிகளை பாராளுமன்ற அலுவல்கள் குழு நிர்ணயித்தது.
இதற்கமைய மே 11 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.