;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு 5வது நாளாக சரிவு- புதிதாக 1,331 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 1,839 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 1,331 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 3,962 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 72 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,752 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 18 ஆயிரத்து 351 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 22,742 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது நேற்றை விட 2,436 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் 3 பேர், டெல்லி, கர்நாடகாவில் தலா 2 பேர் உள்பட 11 பேரும், கேரளாவில் விடுபட்ட 4 மரணங்கள் என மேலும் 15 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 707 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.