இணைய பயனாளர்களின் தரவுகள் திருட்டு !!
இந்தியாவைச் சேர்ந்த பேட்ச்வொர்க் என்று அழைக்கப்படும் அச்சுறுத்தல் மிகுந்த நபர் ஒருவரால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இணைய பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்ட நிலையில், இலங்கையும் அதில் உள்ளடங்குவதாக ஹேக்கர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்காசியா முழுவதும் மிகப்பெரிய சமூக ஊடக இணைய உளவு நடவடிக்கைகளை மெட்டா கண்டுபிடித்துள்ளது.
இதன்படி, மூன்று வெவ்வேறு அச்சுறுத்தல் மிகுந்தவர்களால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான நுட்பமாக செய்யப்பட்ட கற்பனையான கணக்குகளைக் கொண்டு தெற்காசியாவில் உள்ள தனிநபர்களை குறிவைத்து வெவ்வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.