ஆந்திராவில் மனைவி, கள்ளக்காதலன் வெட்டிக்கொலை- கணவர் வெறிச்செயல்!!
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், சரவகோடா பகுதியை சேர்ந்தவர் ராமராவ். இவரது மனைவி எர்ரம்மா (வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (26) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கள்ளக்காதலை கைவிடுமாறு ராமாராவ் அவரது மனைவியிடம் பலமுறை எச்சரித்தார். கணவரின் எச்சரிக்கையை மீறி எர்ரம்மா, சந்தோஷ் குமாருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை சந்தோஷ்குமார் அங்குள்ள பம்பு செட்டில் குளித்துக் கொண்டு இருந்தார்.
இந்த தகவல் அறிந்த ராமராவ் பைக்கில்அங்கு சென்றார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குளித்து கொண்டிருந்த சந்தோஷ் குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத ராமாராவ் ரத்த கரையுடன் அதே கத்தியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி எர்ரம்மாவை வெட்டி சாய்த்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ராமராவை தேடி வருகின்றனர்.