;
Athirady Tamil News

விழிப்புணர்வால் மதமாற்றங்களை தடுக்க முடியும்: சு.ஆனந்தகுமார்!!

0

மதமாற்றங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சசைகள் நாட்டில் எழுந்துள்ளன. கட்டாய மதமாற்றம் என்பது பொதுவாக அனைத்து நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட விடயமாகும். அதேபோன்று இலங்கையிலும் கட்டாய மதமாற்றங்கள் எங்கு இடம்பெற்றாலும் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க ரீதியாக தீர்வு காண ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட விசேட குழு உறுப்பினரும் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் அதிகமானோர் மதமாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. எவராயியும் விரும்பி ஒரு மதத்தை தழுவிக்கொள்வது அவரது மத சுதந்திரம். ஆனால், வறுமை அல்லது இயலாமையை பயன்படுத்தி கட்டாய மதமாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதை ஏற்றுகொள்ள முடியாது. எந்த மதத்தை சார்ந்தவர்களாயினும் அவ்வாறு செயல்பட்டால் அது ஏற்புடையதல்ல.

மதம் சார்ந்த அறிவூட்டல்கள், விழிப்புணர்வுகள் மற்றும் பிரசங்கங்களை மக்களுக்கு வழங்க மதத்தலைவர்கள் தமது பிரசேங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பிரசங்கங்களை போதித்தால் தத்தம் மதங்கள் சார்ந்த விழிப்புணர்வை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்து மதஸ்தங்களிலும் வாரா வாரம் பிரசங்கங்கள் மூலம் மக்களுக்கு நெறிமுறைகளையும் மதம் சார்ந்த விடயங்களை வழங்குவதன் ஊடாக மதமாற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படும் என்பதுடன் கட்டாய மதமாற்றங்களையும் தடுக்க முடியும்.

வறுமை மற்றும் அறியாமையை பயன்படுத்தியே இலங்கையில் மதமாற்றங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. இதனை தடுக்க சமயம் பற்றிய தெளிவான புரிதலை மக்களுக்கு வழங்க வேண்டும். எந்த மதமாயினும் உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டால் மதமாற்றங்கள் இடம்பெறாது என்பதுடன் மதமாற்றங்கள் தொடர்பிலான பிரச்சினைகளும் ஏற்படாது.

சமூக மட்டத்தில் இது தொடர்பில் ஆழமான புரிந்துணர்வை வழங்குவதும் அவர் அவர் மதம்சார் நன்னெறிகளை போதித்து மக்களை நல்வழிப்படுத்துவதும் மதத்தலைவர்களது பொறுப்பும் கடமையும் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.