ரொறன்ரோவில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றியது தீ !!!
கனடாவின் ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் எஞ்சினிலேயே தீப்பற்றிக் கொண்டது.
எட்மோன்டனிலிருந்து ரொறன்ரோ திரும்பிய விமானமே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டது. விமானப் பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் எவருக்கும் கா யங்கள் ஏற்படவில்லை என பியர்சன் விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்படடதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் எதனால் தீப்பற்றிக் கொண்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை