நைஜீரியாவில் கவிழ்ந்தது படகு -15 சிறுவர்கள் மரணம் !!
நைஜீரியா நாட்டில் ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் 15 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகேயுள்ள பகுதியில் இருந்து விறகு சேகரிக்கும் பொருட்டு சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 20 க்கும் அதிகமானோர் படகு ஒன்றில் பயணித்தனர்.
இந்தப் படகு ஆற்றின் நடுவில் செல்லும்போது, திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 13 சிறுமியர், 2 சிறுவர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
படகில் பயணம் செய்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
நைஜீரியாவில் அடிக்கடி படகு விபத்து ஏற்படும் நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் பயணிகளை படகில் ஏற்றிச் செல்வதும் இவ்விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.