மூன்று பேரின் டிஎன்ஏக்களுடன் பிறந்த முதல் குழந்தை..! புதிய மருத்துவ முறையால் ஏற்பட்ட விளைவு !!
இங்கிலாந்து முதல் முறையாக மூன்று பேரின் டி.என்.ஏ (DNA) மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையதுதான். ஆனால் 0.1 சதவீதம் மட்டும் மூன்றாம் நபருடையது என தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தைக்கு தாய், தந்தை மற்றும் கருமுட்டை தானமாக அளிக்கும் பெண் ஆகிய 3 பேரின் டி.என்.ஏ.க்களைப் பெற்றிருக்கும். மரபணு சங்கிலியில் செய்யப்பட்ட இந்த மாற்றம், நிரந்தரமாக அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் வழிவழியாக கடத்தப்படும்.
தாய், தந்தை தவிர்த்து, மூன்றாவது நபர் அதாவது, கருமுட்டை தானமாக அளிக்கும் பெண்ணின் டி.என்.ஏ. முழுக்கமுழுக்க மைட்டோகாண்ட்ரியா என்ற மருத்துவமுறை உருவாக்கம் தொடர்பானதாக மட்டுமே இருக்கும்.
இம்மாதிரியான மருத்துவமுறை மைட்டோகாண்ட்ரியா தொடர்பான நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும்.
இந்த மருத்துவமுறையில் உலகில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. அனால் மூன்று பேரின் டி.என்.ஏ (DNA) மூலம் தற்போது தான் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.