வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களை குறிப்பிட்ட நபரொருவர் அச்சுறுத்தியதாக தெரிவித்து, இன்று (11) காலை முதல் கடமையில் இருந்து விலகியுள்ளனர்.
குறித்த நபர் கைது செய்யப்படாததையடுத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவசர சிகிச்சை தவிர்ந்த சகல சிகிச்சை நடவடிக்கைகளையும் வைத்தியர்கள் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, இன்று காலை வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக, வெளிநோயாளர் பிரிவில் அனைத்து சிகிச்சை மற்றும் மருத்துவ நடவடிக்கைகளும் முடங்கியதுடன், வெறிநோய் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை (12) காலை 8 மணி வரை வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.