;
Athirady Tamil News

சொத்துகளை பெருக்கிக்கொள்ள பேரழிவுகள் பயன்படுகின்றன !!

0

தமது சொத்துக்களை பெருக்கிக்கொள்ளும் தந்திரங்களாக பேரழிவுகளை பயன்படுத்தும் செயற்பாடுகளே நடக்கின்றன என்றும் கப்பல் தீபற்றிய சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் மோசடியுடன் தொடர்புடையவர் சபைக்குள் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

அந்தக் கப்பல் எப்படி எமது கடற்பரப்புக்குள் நுழைந்தது? அந்தக் கப்பல் விபத்துக்கு உள்ளான
பின்னர் பாதிப்பு தொடர்பில் ஆராய சென்றவர்களுக்கு கப்பலுக்குள் நுழைய விடாது தடுத்தது
ஏன்? நஷ்ட ஈடு தொடர்பான விடயத்தில் கப்பலில் இருந்த பொருட்களால் எதிர்காலத்தில் பாதிப்பு
ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன என்று
கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற இலங்கைக் கடலில் விபத்துக்கு உள்ளான
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு தொடர்பான இரண்டாம்நாள்
சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத்
தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “2004ஆம் ஆண்டில் சுனாமி வந்த போது, பேரழிவு ஏற்பட்டது.
இறுதியாக அதனூடாக ஊழல் மோசடிகள் நடந்தன. அதேபோன்று யுத்தத்திலும் பேரழிவுகள்
இடம்பெற்றது. அதிலும் ஆயுதம் மற்றும் மிக் விமான கொள்வனவு மோசடி என்பன நடந்தது.
அத்துடன் கொரோனா பாதிப்பின் போது மருந்து கொள்வனவு உள்ளிட்ட விடயங்களில்
மோசடிகள் நடந்தன.

அதேபோன்று பொருளாதார நெருக்கடியின் போது நிலக்கரி, எரிபொருள் மோசடிகள் தொடர்பில்
கதைக்கப்படுகின்றன. மருந்து கொள்வனவில் நடந்த மோசடியால் நுவரெலியாவில் பலர் கண்
பார்வை பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளன.

இவ்வாறாக பேரழிவுகளில் ஊழல் மோசடிகளே நடக்கின்றன. அந்த வகையிலேயே இந்த கப்பல்
விடயத்திலும் நடக்கின்றது. நீதி அமைச்சர் 250 மில்லியன் டொலர் மோசடி தொடர்பான
தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஏதேவொன்று நடந்துள்ளது என்பதே தெளிவாகின்றது. அந்த சம்பவங்களுடன்
தொடர்புடையவர்கள் இந்த சபையில் இருக்கலாம். இங்கு உரையாற்றுபவர்கள் ஏதும்
நடக்கவில்லை என்பதனை கூறவில்லை” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.