பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார் – ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்!!
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று செல்கிறார். குஜராத்தின் காந்தி நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று காலை 10.30 மணிக்கு காந்தி நகரில் நடைபெறும் அகில இந்திய கல்வி சங்க மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதன்பின், காந்தி நகரில் மதியம் 12 மணிக்கு ரூ.4,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு பிரதமர் மோடி சாவியை வழங்குவார்.