ஸ்கூட்டர்கள், பைக்குகள் மீது காரை ஏற்றிய பெண்- வீடியோ வைரலானதால் போலீசார் நடவடிக்கை!!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் டிரைவிங் கற்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் தனது காரை தாறுமாறாக ஓட்டி உள்ளார். மேலும் காரை ரிவர்ஸ் செய்யும் போது அவரால் காரின் வேகத்தையும் கட்டுப்படுத்த தெரியாமல் திணறி உள்ளார். அப்போது பரபரப்பான சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளின் மீது அந்த பெண் காரை ஏற்றி உள்ளார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.