தினசரி பாதிப்பு 2-வது நாளாக சரிவு: புதிதாக 1,580 பேருக்கு கொரோனா!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 2,109 ஆக இருந்தது. நேற்று 1,690 ஆக சரிந்த நிலையில் இன்று 1,580 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரத்து 179 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,167 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 28 ஆயிரத்து 417 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 18,009 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 1,604 குறைவாகும். தொற்று பாதிப்பால் நேற்று 12 பேரும், கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 5 என மேலும் 17 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது.