இஸ்ரேலின் அத்துமீறிய தொடர் தாக்குதல் – பாலிஸ்தீன அரசு புகார்..!
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன் அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக காஸா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுகளை வீசி வருகிறது.
குறிப்பாக, காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள கட்டடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
கடந்த செவ்வாய் கிழமை முதல் இரவு பகலாக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலில், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தலைவர்கள் இருவர் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 90-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 10 பேர் சாதாரண மக்கள் எனவும், இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.