;
Athirady Tamil News

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் – கலெக்டர் தகவல் !!

0

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் பணிகாலியிடங்களுக்கு கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள். ஓ.பி.சி.பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.